tamilnadu

img

பாலியல் புகாரில் பாஜக தலைவர் சின்மயானந்தா கைது!

லக்னோ:
பாஜக தலைவரும் மத்திய முன்னாள் அமைச்சருமான சின்மயானந்தா, தனது கல்லூரியில் சேருவதற்கு உதவிசெய்து, பின்னர் ஒரு வருடம் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று 23 வயது சட்டக் கல்லூரி மாணவி ஒருவர், அண்மையில் குற்றம்சாட்டினார்.

சின்மயானந்தாவின் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட வீடியோ ஆதாரங்களையும் பாதிக்கப்பட்ட மாணவி, சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைத்தார். “நான் குளிப்பதை வீடியோ எடுத்து, அதனைக் காட்டியே, சின்மயானந்தா என்னை மிரட்டி பாலியல் வல்லுறவு செய்து கொடுமைப்படுத்தினார்; முதன்முதலில், எனது விடுதி அறையில் இருந்து துப்பாக்கி முனையில் அழைத்து செல்லப்பட்டு சின்மயானந்துக்கு மசாஜ் செய்ய வற்புறுத்தப்பட்டேன். ஒரு வருடமாக இந்த 
கொடுமை நீடித்தது;  இதைத்தொடர்ந்தே ஆதாரப்பூர்வமாக சின்மயானந்த் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் என்று ரகசிய கேமிரா பொருத்தி, அவரது கொடுமைகளை வீடியோ எடுத்தேன்” என்றும் மாணவி வாக்குமூலம் அளித்தார்.
எனினும், சின்மயானந்தா மீது, கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படாததால், ஆவேசமடைந்த மாணவி, சின்மயானந்தை உடனடியாக கைது செய்யவில்லை என்றால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று பகிரங்கமாக அறிவித்தார்.
இதனால் நெருக்கடி முற்றுவதை உணர்ந்த சாமியார் சின்மயானந்தா, எங்கே தன்னைக் கைது செய்துவிடுவார்களோ என்று அச்சத்தில், சின்மயானந்தா, கடந்த சில நாட்களாக  உடல்நிலை சரியில்லை என்று படுத்துக் கொண்டார். சின்மயானந்தா கவலைக்கிடமாக இருக்கிறார் என்றும் செய்திகளும் பரப்பப்பட்டன. ஆனால், கைதுக்குப் பயந்தே, சின்மயானந்தா நாடகம் போடுகிறார் என்பதை உணர்ந்து கொண்ட, சிறப்புவிசாரணைக்குழுவினர், வெள்ளிக்கிழமையன்று அதிகாலை அவரைக் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.

;